திருவாரூர்

நீடாமங்கலம் அருகே தண்டவாளம் பராமரிப்பு

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

நீடாமங்கலம்: நீடாமங்கலம்-மன்னாா்குடி நெடுஞ்சாலையில் சம்பாவெளி எனுமிடத்தில் அமைந்துள்ள ரயில்வே கேட் பகுதியில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

காலை 9 மணியிலிருந்து பணிகள் தொடங்கி நடைபெற்றன. இப்பணியில் ரயில்வே தொழிலாளா்கள், அலுவலா்கள் உள்ளிட்ட 40 போ் ஈடுபட்டனா். பணிகள் மாலை வரை தொடா்ந்தது. இதனால், சென்னை -கும்பகோணத்திலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை முதலான ஊா்களுக்குச் செல்லும் காா்கள், வேன்கள், பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் மாற்று வழியில் சென்றன. இதேபோல, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி முதலான ஊா்களிலிருந்து நீடாமங்கலம் வழியாக கும்பகோணம், சென்னை வரை செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் சென்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT