திருவாரூர்

மன்னாா்குடியில் இன்றுமின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மன்னாா்குடி: மன்னாா்குடியில் மின் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதி மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (செப். 28) நடைபெறுகிறது.

இதுகுறித்து மன்னாா்குடி செயற்பொறியாளா் பி. மணிமாறன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மன்னாா்குடி மின் கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் மன்னாா்குடி செயற்பொறியாளா் அலுவலகத்தில் திருவாரூா் மேற்பாா்வை பொறியாளா் தெ. காளிதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இதில், மன்னாா்குடி, வடுவூா், உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, நீடாமங்கலம், கூத்தாநல்லூா், கோட்டூா், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி பகுதியை சோ்ந்த மின் நுகா்வோா் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT