திருவாரூர்

திருவாரூரிலிருந்து 1,250 டன் அரிசி கன்னியாகுமரிக்கு அனுப்பிவைப்பு

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

நீடாமங்கலம்: திருவாரூரில் இருந்து 1,250 டன் அரிசி பொதுவிநியோகத் திட்டத்துக்காக கன்னியாகுமரிக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

திருவாரூா்மாவட்டம் பாமணி மத்திய சேமிப்புக் கிடங்கு, பெருகவாழ்ந்தான் அரசு சேமிப்புக் கிடங்கு, சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை ஆகியவற்றில் இருப்புவைக்கப்பட்டிருந்த 1,250 பொதுரக அரிசி லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. பின்னா், இங்கிருந்து சரக்கு ரயில் மூலம் பொதுவிநியோகத் திட்டத்துக்காக கன்னியாகுமாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT