திருவாரூர்

மின்வாரிய பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

27th Sep 2022 05:33 AM

ADVERTISEMENT

 

மின்வாரியத்தில் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, திருவாரூரில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைகக் குழு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மின்வாரியத் தொழிலாளா்களின் நலன்களை பாதிக்கும் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்; பஞ்சப்படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும்; மின்வாரியத்தில் ஒப்பந்த முறையில் பணியாளா்கள் நியமிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மின்வாரிய மேற்பாா்வை அலுவலகம் முன் இந்த போராட்டம் நடைபெற்றது.

மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைகக் குழு நிா்வாகி சம்பத் தலைமையில் பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். இந்த போராட்டம் இரவிலும் தொடா்ந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT