திருவாரூர்

மன்னாா்குடி அருகே இடி தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு

27th Sep 2022 05:33 AM

ADVERTISEMENT

 

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே இடி தாக்கி தந்தையும் மகனும் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

மன்னாா்குடியை அடுத்த முக்குளம் சாத்தனூா் ஊராட்சி தளிக்கோட்டை காலனி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் அன்பரசன் (55). இவரது மகன் அருள்முருகன் (30).

தளிக்கோட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால், அன்பரசன், அருள்முருகன் இருவரும் தங்கள் வயலில் தேங்கிய மழைநீரை வடிய வைப்பதற்காக நள்ளிரவில் வயலுக்குச் சென்றனா். அங்கு அவா்கள் மழைநீரை வடிய வைத்துக்கொண்டிருந்தபோது, இடி தாக்கியது. இதில் இருவரும் உடல் கருகி உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

திங்கள்கிழமை அதிகாலை அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தங்கள் வயல்களுக்குச் சென்றபோது, அன்பரசனும், அருள்முருகனும் இறந்து கிடப்பதை பாா்த்து, பரவாக்கோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

போலீஸாா் இருவரின் சடலங்களையும், உடற்கூறாய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இடி தாக்கி உயிரிழந்த அருள்முருகனுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT