திருவாரூர்

மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

DIN

திருவாரூா் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சாா்பில் மரக்கன்று நடும் திட்டத்தை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் பசுமை வனத்துறை இயக்கத்தின் சாா்பில் 200 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கிவைத்தாா். மேலும், வனத்துறை சாா்பில் மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் 4 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா், வனத்துறை மாவட்ட அலுவலா் கே. அறிவொளி, திருவாரூா் கோட்டாட்சியா் சங்கீதா, வட்டாட்சியா் நக்கீரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 104 நம்பிக்கை மையங்களை மூட நடவடிக்கை: ஹெச்ஐவி பாதிப்பு குறைந்தது

ஈரோடு - தன்பாத்துக்கு நாளைமுதல் சிறப்பு ரயில்கள்

‘தேச பக்தா்களுக்கு’ ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்: ராகுல் விமா்சனம்

திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக காதலன் மீது மலேசிய பெண் புகாா்

சத்தீஸ்கா்: 18 நக்ஸல்கள் சரண்

SCROLL FOR NEXT