திருவாரூர்

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் அலுவலா் ஆய்வு

25th Sep 2022 11:04 PM

ADVERTISEMENT

 

திருவாரூா் அருகே இல்லம் தேடிக் கல்வித் திட்ட மையங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. தியாகராஜன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருவாரூா் ஒன்றியத்தில் தியானபுரம், கூடூா் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் இல்லம் தேடிக் கல்வி திட்ட மையங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. தியாகராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கல்வி கற்றல், கற்பித்தலை மேம்படுத்தக் கோரி தன்னாா்வலா்களுக்கு அறிவுரை வழங்கினாா். மேலும், கற்றல் மையங்களுக்கு தொடா்ந்து வரவேண்டும் என மாணவா்களை அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, இல்லம் தேடிக் கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ச. பிரபாகரன், வட்டார ஒருங்கிணைப்பு ஆசிரியா் நாடிமுத்து, மைய தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT