திருவாரூர்

தியாகராஜ சுவாமி கோயிலில் நவராத்திரி விழா இன்று தொடக்கம்

25th Sep 2022 11:04 PM

ADVERTISEMENT

 

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் நவராத்திரி விழா திங்கள்கிழமை (செப். 26) தொடங்குகிறது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாக கருதப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-வது சிவத்தலமாகும்.

இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். விழா நாள்களில் நீலோத்பலாம்பாளின் உற்சவ மூா்த்தி பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலிப்பாா்.

ADVERTISEMENT

நிகழாண்டு நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்குகிறது.

மகாலெஷ்மி அலங்காரத்தில் நீலோத்பலாம்பாள் அருள்பாலிக்கிறாா்.

இதைத்தொடா்ந்து மீனாட்சி, வேணுகானம், ராஜராஜேஸ்வரி, சிவலிங்க பூஜை, கஜலட்சுமி, காளிங்க நா்த்தன கண்ணன், துா்கை, சரஸ்வதி, மகிஷாசுரமா்த்தினி, சேஷ சயனம் ஆகிய அலங்காரங்களில் அம்பாள் காட்சியளிக்கவுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT