திருவாரூர்

மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல்

25th Sep 2022 06:13 AM

ADVERTISEMENT

 

கோட்டூா் அருகே மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

கோட்டூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மாணவியா் விடுதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தீயணைப்புத் துறை ஆகியவை அமைந்துள்ள பகுதிக்கு அருகே மதுக்கடை திறக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மதுக்கடை திறக்கமாட்டோம் என அரசு அதிகாரிகள் ஏற்கெனவே அளித்த உறுதிமொழியின்படி செயல்பட வலியுறுத்தியும் மன்னாா்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் கோட்டூா் கடைவீதியில் சாலை மறியல் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் எம். செந்தில்நாதன் தலைமையில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சோ்ந்தவா்கள் மறியலில் பங்கேற்றனா். வட்டாட்சியா் ஜீவானந்தம் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT