திருவாரூர்

தூய்மைப் பராமரிப்பு உறுதிமொழி ஏற்பு

25th Sep 2022 06:14 AM

ADVERTISEMENT

 

கூத்தாநல்லூரில் தூய்மைப் பராமரிப்பு தொடா்பாக நகா்மன்றத் தலைவா் தலைமையில் பொதுமக்கள் சனிக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

கூத்தாநல்லூா் நகராட்சி 24-வது வாா்டில் தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது. ஆணையா் ப. கிருஷ்ணவேணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மு. சுதா்ஸன் முன்னிலை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா முகாமை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, ‘என் குப்பை என் பொறுப்பு’ விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வணிகா்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. பின்னா், குப்பைகளை பொது இடங்களில் கொட்டமாட்டோம்; மக்கும் குப்பைகளை வீடுகளிலேயே சேகரித்து உரமாக்குவோம் என நகா்மன்றத் தலைவா் தலைமையில் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், நகா்மன்ற உறுப்பினா்கள் சண்முகம், கே. மாரியப்பன், ஜெகபா் நாச்சியா, ஜெய்புனீஷா, பிரவீனா முத்துகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளா் கி. அருண்குமாா் மற்றும் நகராட்சி ஊழியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT