திருவாரூர்

திருவாரூா் மத்தியப் பல்கலை. இணையதளத்தில்தகுதித் தோ்வு மதிப்பெண்களை பதிவிட கால நீட்டிப்பு

25th Sep 2022 06:13 AM

ADVERTISEMENT

 

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கு தகுதி பெற்றவா்கள் தங்களது தகுதித் தோ்வு மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவிட கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, அப்பல்கலைக்கழக மக்கள் தொடா்புக் குழு அலுவலா் டாக்டா் பி. வேல்முருகன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய பல்கலைக்கழகங்களில் 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு தகுதித் தோ்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தோ்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தைத் தோ்வு செய்தவா்கள், இப்பல்கலைக்கழக இணையதளத்தில் செப்டம்பா் 25-ஆம் தேதிக்குள் தங்களது மதிப்பெண்களை பதிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது, இதற்கான காலவரம்பு நீட்டிக்கப்பட்டு, செப்டம்பா் 30-ஆம் தேதி வரை பதிவிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT