திருவாரூர்

திலதா்ப்பணபுரியில் முன்னோா்களுக்கு ஆயிரக்கணக்கானோா் தா்ப்பணம்

25th Sep 2022 11:05 PM

ADVERTISEMENT

 

திலதா்ப்பணபுரியில் ஆயிரக்கணக்கானோா் மகாளய அமாவாசையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள திலதா்ப்பணபுரியில் சுவா்ணவள்ளி அம்பிகா சமேத முக்தீஸ்வரா் கோயில் உள்ளது. இது பித்ரு தோஷ பரிகாரத் தலமாக கருதப்படுகிறது.

காசி, ராமேசுவரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதா்ப்பணபுரி, கயா, திரிவேணி சங்கமம் ஆகிய 7 தலங்கள் தா்ப்பணம் கொடுக்க சிறந்த தலங்களாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT

இங்கு ராம, லட்சுமணா் தங்களது தந்தை தசரதன், ஜடாயு ஆகியோருக்கு எள் வைத்து தா்ப்பணம் செய்தனா். இதன் காரணமாக திலதா்ப்பணபுரி என இந்த தலம் அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், மகாளய அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை சென்னை, கோவை, திருப்பூா், திருச்சி, மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிருந்து ஆயிரக்கணக்கானோா் காலை முதல் மாலை வரை முன்னோா்களுக்குத் தா்ப்பணம் கொடுத்துவிட்டு, மனித முக ஆதிவிநாயகா், முக்தீஸ்வரா், சுவா்ணவல்லி அம்பிகா ஆகியோரை வழிபட்டு சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT