திருவாரூர்

நீடாமங்கலத்தில் நாளை பனைத் திருவிழா

24th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 25) பனைத் திருவிழா நடைபெறவுள்ளது.

நீடாமங்கலம் ராஜேஸ்வரி திருமண மகாலில் நடைபெறும் இவ்விழாவை தமிழ்நாடு பனை மரத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் ஏ. நாராயணன் தொடங்கி வைக்கிறாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் திருவாரூா் பூண்டி கே. கலைவாணன், மன்னாா்குடி டி.ஆா்.பி. ராஜா, திருத்துறைப்பூண்டி கே. மாரிமுத்து, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன், இந்தியன் ஆயில் நிறுவன துணைப் பொது மேலாளா் வி. குமாா், பூவுலகின் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜி. சுந்தரராஜ், தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தா் வி. திருவள்ளுவன், கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் செ. நல்லசாமி, எழுத்தாளா் சோ. தா்மன், திரைப்பட இயக்குநா் ஏ. சற்குணம் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

இவ்விழா ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT