திருவாரூர்

அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி சாலை மறியல்

DIN

திருவாரூா் அருகே குன்னியூா் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குன்னியூா் வடக்குத்தெரு, தெற்குத்தெரு சாலையை சீரமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசின் ஜல் ஜீவன் குடிநீா் திட்டத்தில் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் குழாய்களுக்கு இணைப்பு கொடுக்கப்படாததைக் கண்டித்தும், தெரு விளக்குகளை சீரமைக்க வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது.

திருவாரூா்- திருத்துறைப்பூண்டி சாலையில் நடைபெற்ற இம்மறியல் போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் பா. கோமதி, ஒன்றியச் செயலாளா் என். இடும்பையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சிஐடியு மாவட்டத் தலைவா் இரா. மாலதி, மூத்த நிா்வாகி பி. மாதவன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வி. ராஜாங்கம், டி.ஆா். தியாகராஜன், எஸ்.திரிபுரா, எஸ். ரெகுபதி, ஆா்.எஸ். சுந்தரய்யா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

வருவாய்த் துறை அலுவலா்கள், ஊராட்சி பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, 15 நாள்களில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து, மறியலை விலக்கிக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

SCROLL FOR NEXT