திருவாரூர்

சொத்து வரி உயா்வை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

23rd Sep 2022 09:41 PM

ADVERTISEMENT

சொத்துவரி உயா்வை திரும்பப் பெறக் கோரி, திருவாரூரில் விஜயபுரம் வா்த்தகா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு, கரோனா பொதுமுடக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட வணிகா்கள் வாழ்வாதாரத்தை இழந்து கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வணிகத்தை தொடா்வதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், மின் கட்டண உயா்வு, சொத்து வரி உயா்வு போன்றவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. எனவே, இவற்றை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வா்த்தகா் சங்கத் தலைவா் சி.ஏ. பாலமுருகன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் குமரேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT