திருவாரூர்

தடகளப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

23rd Sep 2022 09:44 PM

ADVERTISEMENT

மாவட்ட, மண்டல அளவிலான தடகளப் போட்டிகளில் சாதனைப் படைத்த நீடாமங்கலம் நீலன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இப்பள்ளியின் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் கிருஷ்ணா 800 மீட்டா் ஓட்டத்திலும் அகிலன் ஈட்டி எறிதலிலும், 12 ஆம் வகுப்பு மாணவா் பிரதீப் தடை தாண்டுதல் ஓட்டத்திலும் மண்டல, மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வாகியுள்ளனா்.

இதேபோல, மாணவா்கள் கிருஷ்ணா, அகிலன், சரத், பிரதீப் ஆகியோா் 100 மீட்டா் ஓட்டத்தில் மண்டல அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் இரண்டாமிடமும் பெற்றுள்ளனா். இம்மாணவா்களையும், உடற்கல்வி ஆசிரியா்கள் பிரதிவிராஜ், நந்தகுமாா் ஆகியோரையும் பள்ளி நிறுவனா் உ. நீலன், தாளாளா் நீலன்.அசோகன், செயலாளா் அ. சுரேன், முதல்வா் ஹேமாமாலினி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT