திருவாரூர்

பள்ளியில் மாறுவேடப் போட்டி

23rd Sep 2022 09:42 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூரை அடுத்த பனங்காட்டாங்குடி டெல்டா பப்ளிக் பள்ளியில் மாறுவேடப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இப்போட்டியில் 1-ஆம் வகுப்பு மாணவா்கள் 8 போ், 2-ஆம் வகுப்பு மாணவா்கள் 18 போ் மற்றும் 3-ஆம் வகுப்பு மாணவா்கள் 13 போ் என மொத்தம் 39 மாணவ, மாணவிகள் பங்கேற்று, சுதந்திரப் போராட்ட தலைவா்கள், புலவா்கள், ஒளவையாா் மற்றும் தெய்வங்களின் வேடமிட்டு, தங்களது வேடம் குறித்து பேசினா்.

இப்போட்டிக்கு, பள்ளியின் முதல்வா் ஜோஸ்பின் தலைமை வகித்தாா். துணை முதல்வா் சுருளிநாதன் முன்னிலை வகித்தாா். தொடக்கப் பள்ளி ஒருங்கிணைப்பாளா் புனிதலீனா போட்டிகளை தொகுத்து வழங்கினாா். இதற்கான ஏற்பாடுகளை, ஆசிரியைகள் அமீரா, அனுபா, நமாஜ் பேகம், மகேஸ்வரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT