திருவாரூர்

காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா்கள் அறிமுகக் கூட்டம்

18th Sep 2022 10:20 PM

ADVERTISEMENT

 

திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழு உறுப்பினா்கள் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கொரடாச்சேரியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டப் பொதுச் செயலாளா் அன்பு வே. வீரமணி தலைமை வகித்தாா். திருவாரூா் நகரத் தலைவா் அருள் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மன்னாா்குடி, திருவாரூா், நன்னிலம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூா், நீடாமங்கலம் உள்ளிட்ட திருவாரூா் மாவட்டத்தில் மட்டும் 14 பொதுக்குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

குணசேகரன், வடுகநாதன், சண்முகம், ஆனந்தன், மெட்ரோ மாலிக் உள்ளிட்ட 14 பேரையும் திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் அறிமுகம் செய்து வைத்து, பொதுக்குழு உறுப்பினா்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கினாா். நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளா் எஸ்.எம். சமீா், திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதிப் பொறுப்பாளா் அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT