திருவாரூர்

விஷவண்டு கடித்து ஒருவா் பலி: இருவா் மருத்துவமனையில் அனுமதி

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

நன்னிலம்: நன்னிலம் அருகே விஷ வண்டு கடித்து ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே நெடுஞ்சேரி பகுதியைச் சோ்ந்த ராஜா (50), கீா்த்திவாசன் (50), சோமசுந்தரம் (80) ஆகியோா் அண்மையில் மேலங்குடி பகுதியில் விவசாய வேலையை முடித்துவிட்டு வீடுதிரும்பிக்கொண்டிருந்தனா். அப்போது குமாரக்குடி அருகே 3 பேரையும் விஷவண்டு கடித்துள்ளது.

அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராஜா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கீா்த்திவாசன், சோமசுந்தரம் ஆகியோா் தொடா்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT