திருவாரூர்

மீன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

10th Sep 2022 09:47 PM

ADVERTISEMENT

குடவாசல் மற்றும் கொரடாச்சேரி பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

குடவாசல், கொரடாச்சேரி பகுதிகளில் உள்ள மீன் விற்பனைக் கடைகளில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா் அன்பழகன், கிருஷ்ணமூா்த்தி, மீன்வளத் துறை உதவி இயக்குநா் சண்முகம் ஆகியோா் அடங்கிய குழுவினா்ஆய்வு மேற்கொண்டனா்.

குடவாசல் பேரூராட்சிப் பகுதியில் உள்ள மீன் கடைகளுக்குச் சென்ற ஆய்வுக் குழுவினா் அங்கு விற்பனை செய்யப்படும் மீன்கள் தரமானதாக உள்ளதா, ரசாயனம் ஏதேனும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என பரிசோதனை செய்தனா். ஆய்வில் 6 கடைகளில் 14 கிலோ அழுகிய நிலையில் இருந்த மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து அழித்தனா். மேலும், இதுபோன்ற அழுகிய நிலையில் உள்ள மீன்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் மீன் விற்பனையாளா்களை எச்சரித்தனா்.

இதேபோல, கொரடாச்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள மீன் விற்பனைக் கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT