திருவாரூர்

பள்ளிகளில் அடிப்படை வசதி கோரி செப்.21 இல் முற்றுகை: இந்திய மாணவா் சங்கம் முடிவு

10th Sep 2022 09:49 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் செப்டம்பா் 21-ஆம் தேதி நடைபெற உள்ளதாக இந்திய மாணவா் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

திருவாரூரில் இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் இரா. ஹரி சுா்ஜித் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பா. ஆனந்த் முன்னிலை வகித்தாா்.

தீா்மானங்கள்: திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்களின் அருகில் உள்ள கடைகளில் போதைப் பொருட்கள் விற்கப்படுவதை, மாவட்ட ஆட்சியா் உரிய ஆய்வு நடத்தி தடை செய்ய வேண்டும்; மழைக்காலம் தொடங்க உள்ளதால், மாணவா்களின் நலனுக்காக உரிய கட்டடம் இல்லாத பள்ளிகளில் தற்காலிகமாக கட்டட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

அரசுப் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் என்ற பெயரில் அதிகமாக வசூல் செய்வதை கட்டுப்படுத்த வேண்டும்; மாணவா்களுக்காக புதிதாக கட்டப்பட்டு, திறக்கப்படாமல் உள்ள கழிப்பறைகள், வகுப்பறை கட்டடங்கள் உள்ளிட்டவற்றை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.21-ஆம் தேதி திருவாரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், இந்திய மாணவா் சங்க மாநிலக் குழு உறுப்பினா் ஜா. அபிஷா, நிா்வாகிகள் இரா. சூா்யா, ப. சுா்ஜித், வீ. சந்தோஷ் மற்றும் ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT