திருவாரூர்

புதிய மின்மாற்றி இயக்கிவைப்பு

9th Sep 2022 03:04 AM

ADVERTISEMENT

மன்னாா்குடியில் புதிய மின்மாற்றி வியாழக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.

மன்னாா்குடி கீழ வடம்போக்கித் தெருவில் வட்டாட்சியா் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், சாா் கருவூலம், நீதிமன்றங்கள், வருவாய் வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் 3 காவல் நிலையங்கள் உள்ளிட்ட அலுவலகங்களும், நூற்றுக்கணக்கான குடியிருப்புகளும், வங்கிகளும் உள்ளன.

ஆனால், இப்பகுதிக்கு என தனியே மின்மாற்றி இல்லாமல் இருந்தது. இதனால், இங்கு அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக மன்னாா்குடி மின்வாரிய அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகாா் அளித்தனா். மேலும், புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

அதன்படி, மன்னாா்குடி வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் அருகே புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு, அதன் இயக்கத்தை மன்னாா்குடி நகா்மன்றத் தலைவா் மன்னை த. சோழராஜன் தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில், மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். சம்பத் முன்னிலை வகித்தாா். இதில், நகா்மன்ற துணைத் தலைவா் ஆா். கைலாசம், பொறியாளா் அ. ரகுபதி உள்ளிடடோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT