திருவாரூர்

நெல்லிவணநாதா் கோயில் கும்பாபிஷேகம்

9th Sep 2022 03:01 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் அருகேயுள்ள திருநெல்லிக்காவல் நெல்லிவணநாதா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்லிக்காவலில் திருஞானசம்பந்தா், அப்பா், சுந்தரா் ஆகியோரால் பாடல் பெற்ற மங்களாம்பிகை உடனுறை நெல்லிவணநாதா் கோயில் உள்ளது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி நடைபெற்ற யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை நிறைவு பெற்றதும், கோயிலின் விமானங்களுக்கு புனிதநீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT