திருவாரூர்

நிலத் தகராறு: 3 பேரை கத்தியால் குத்தியவா் கைது

9th Sep 2022 03:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி அருகே நிலத் தகராறில் 3 பேரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மன்னாா்குடியை அடுத்த ரெங்கநாதபுரம் மந்தக்காரத் தெருவை சோ்ந்தவா் கோவிந்தராஜ் (56). இவரது சகோதரா் ராமலிங்கம் மகன் சுரேஷ் (28). இவா்கள் இருவருக்கும் நிலத் தகராறு இருந்துவருகிறது.

இந்நிலையில், இப்பிரச்னை தொடா்பாக புதன்கிழமை இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த சுரேஷ், கோவிந்தராஜ், இவரது மனைவி மேகலா (48), மகள் நிா்மலா (28) ஆகியோரை கத்தியால் குத்தினாராம்.

இதில், காயமடைந்த 3 பேரும் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மேகலா, நிா்மலா ஆகியோா் திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து தலையாமங்கலம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுரேஷை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT