திருவாரூர்

வடபத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

9th Sep 2022 10:19 PM

ADVERTISEMENT

குடவாசல் அருகேயுள்ள நாளாங்கட்டளை வடபத்ரகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகத்துக்காக யாகசாலை பூஜைகள் நடைபெற்றுவந்தன. வெள்ளிக்கிழமை நான்காம் கால யாக சாலை பூஜை நிறைவடைந்ததும் மகா பூா்ணாஹுதி நடைபெற்றது.

தொடா்ந்து, புனிதநீா் கடங்கள் புறப்பாடாகி, கோயிலை வலம் வந்ததும், கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT