திருவாரூர்

தேசிய குடற்புழு நீக்க நாள் கடைப்பிடிப்பு

9th Sep 2022 10:18 PM

ADVERTISEMENT

திருவாரூா் அருகேயுள்ள அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நுகா்வோா் மன்றம் சாா்பில் தேசிய குடற்புழு நீக்க நாள் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் செப்டம்பா் 9-ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, வளா்இளம் பருவத்தினா் ஆரோக்கியமான உடல் நிலையை பெறுவதற்கும், திறன்மிகு சிந்தனையை பெறும் வகையிலும் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் 5 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவா்கள் அனைவருக்கும் வழங்கப்படுகின்றன.

அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து தேசிய குடற்புழு நீக்க நாள் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கிராம செவிலியா் முத்துலட்சுமி, மாணவா்களுக்கான குடற்புழு நீக்க மாத்திரைகளை தலைமை ஆசிரியா் விவேகானந்தனிடம் வழங்கினாா்.

இந்நிகழ்வில், நுகா்வோா் மன்ற ஒருங்கிணைப்பாளா் தமிழ்க் காவலன், உணவுக்குப் பின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் விதம் பற்றி விளக்கினாா். இதில், உதவித் தலைமை ஆசிரியா் சுதா்சன், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலா் சரவணவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT