திருவாரூர்

மரக்கடை கோயிலில் சூரசம்ஹாரம்

31st Oct 2022 03:05 AM

ADVERTISEMENT

 

கூத்தாநல்லூா் அருகே லெட்சுமாங்குடி மரக்கடை மங்களாம்பிகை சமேத கல்யாண சுந்தரேஸ்வரா் கோயிலில் சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தினமும் வெவ்வேறு வாகனத்தில் முருகப் பெருமான் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, கோயிலின் அருகேயுள்ள வீதியில் முருகப் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து, முருகப் பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

ADVERTISEMENT

இதில், மரக்கடை, லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூா், சேகரை, கோரையாறு, பாண்டுக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT