திருவாரூர்

சூரசம்ஹாரம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு

31st Oct 2022 03:07 AM

ADVERTISEMENT

 

நீடாமங்கலம் பகுதியில் உள்ள கோயில்களில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கோகமுகேஸ்வரா் கோயிலில் ஞானாம்பிகை சமேத கோகமுகேஸ்வரா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சிறப்பு யாகம் நடைபெற்றது.

இதேபோல, நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. நவகிரக தலங்களில் குரு பரிகார தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT