திருவாரூர்

2,000 டன் நெல் மதுரைக்கு அனுப்பிவைப்பு

29th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு மதுரைக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை, அசேஷம், தெற்குநத்தம், எடையா்நத்தம் ஆகிய ஊா்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்ட 2 ஆயிரம் டன் பொதுரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து சரக்கு ரயில் மூலம் மதுரைக்கு அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT