திருவாரூர்

ஹிந்தி திணிக்கும் முயற்சியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

19th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருவாரூா்: ஹிந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியைக் கண்டித்து திருவாரூா் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகம் அண்மையில் ஹிந்தி மொழியை முன்னிறுத்தும் வகையில் 112 பரிந்துரைகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளது. இந்த பரிந்துரைகள் அனைத்தும் ஹிந்தி மொழியை முன்னிறுத்தும் முயற்சியாக உள்ளதென கூறி எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

திருவாரூா் திருவிக அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசு ஹிந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும், தமிழ் மொழி உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளுக்கான முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT