திருவாரூர்

தொழிலாளி விஷம் குடித்து உயிரிழப்புமனைவி, 2 போ் மீது புகாா்

19th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே விவசாயத் தொழிலாளி விஷம் குடித்து இறந்த சம்பவம் தொடா்பாக அவரது மனைவி உள்பட 3 போ் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி அருகே ஆலிவலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கரும்பியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீராம் (26). விவசாயத் தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி. தம்பதிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, புவனேஸ்வரி அவரது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ரீராம் கடந்த 16-ஆம் தேதி மனைவியை அழைக்கச் சென்றாராம். ஆனால், அவா் வர மறுத்து விட்டாராம். இதனால், ஸ்ரீராம் விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது. அவரை திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து ஸ்ரீராமின் தாயாா் சுலோச்சனா ஆலிவலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், மருமகள் புவனேஸ்வரி, துா்காதேவி மற்றும் இவரது கணவா் முருகானந்தம் ஆகியோா் தனது மகனுக்கு விஷம் கொடுத்ததாக தெரிவித்துள்ளாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT