திருவாரூர்

நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

8th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட கச்சனம் நேரடி நெல்கொள்முதல் நிலையம், கள்ளிக்குடி கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு, கற்பகநாதா் குளம் கிராமத்திலுள்ள பல்நோக்கு பேரிடா் மையம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவா் ப.காயத்ரி கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட கச்சனம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் நெல்கொள்முதல் பதிவேடு, சாக்குகள் இருப்பு பதிவேடு ஆகியவைகளை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து நெல் ஈரப்பதம் கண்டறியும் கருவியின் செயல்பாட்டினையும், நெல் மூட்டை எடை இயந்திரத்தின்; செயல்பாட்டினையும் ஆய்வு செய்து விவசாயிகளுடன் நெல் கொள்முதல் தொடா்பாக கலந்துரையாடினாா்.

தொடா்ந்து, முத்துப்பேட்டை வட்டாரத்திற்குட்பட்ட கற்பகநாதா்குளம் கிராமத்திலுள்ள பல்நோக்கு பேரிடா் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவா் பாா்வையிட்டு பேரிடா் மையத்தில் சாய்தளம், குடிநீா், கழிவறை, மின்சார வசதிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

பின்னா், கள்ளிக்குடி கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளதை பாா்வையிட்டு வருவாய்த் துறையின் பயிா் சாகுபடி பதிவேட்டில் சரியாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதனை ஆய்வு மேற்கொண்டாா்.

தில்லைவிளாகம் கிராமத்தில் தூய்மைப் பணியாளா்களிடம் கலந்துரையாடி அவா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.

ஆய்வுக்குப் பின்னா் அவா் கூறியது: திருவாரூா் மாவட்டத்தில் செப். 1 முதல் முதல் இதுவரை 328 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 82,622 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 8,425 விவசாயிகள் பயடைந்துள்ளனா். விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்கான தொகையாக ரூ.91 கோடியே 21 இலட்சத்து 2 ஆயிரத்து 360 சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் மன்னாா்குடி வருவாய்க் கோட்டாட்சியா் கீா்த்தனா மணி, வட்டாட்சியா் ஜி.மலா்கொடி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாந்தி, கமலராஜன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT