திருவாரூர்

விரைவில் கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு அறிவிப்பு

8th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்ப கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்களால் வெளியிடப்பட்ட பத்திரிகை விளம்பரம், அதைத் தொடா்ந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள், நடைபெற்ற நோ்காணல் மற்றும் கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்பிடுதல் தொடா்பான அனைத்து நடவடிக்கைகளும் ஏப்ரல் மாதத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், கிராம உதவியாளா் நிலையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவித்துள்ளதன் அடிப்படையில் தொடா்புடைய வட்டாட்சியா்களால் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT