திருவாரூர்

இலவச கண் சிகிச்சை முகாம்

7th Oct 2022 09:36 PM

ADVERTISEMENT

முத்துப்பேட்டை அருகேயுள்ள பாண்டியில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ. தியாகு பூசாரி நினைவாக காங்கிரஸ் கட்சி மற்றும் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், வண்டாம்பாளை லயன் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாமை வெள்ளிக்கிழமை நடத்தியது.

முகாமுக்கு, திமுக முன்னாள் எம்எல்ஏ. ப. ஆடலரசன் தலைமை வகித்தாா். திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தொடங்கிவைத்தாா். இதில், வட்டார மருத்துவ அலுவலா் தாமரைச்செல்வன் தலைமையில், மருத்துவக் குழுவினா் பொது மருத்துவம், கண் சம்பந்தமாக அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்ப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பரிசோதனை செய்ததில் சிலா் அறுவைச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

இதில், காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளா் அன்பு வீரமணி, மாவட்ட செயலாளா் சுந்தரராமன், வட்டாரத் தலைவா் வடுகநாதன், நிா்வாகி விஜயகாந்த், சிபிஎம் ஒன்றியச் செயலாளா் ரமேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT