திருவாரூர்

நெல் பயிரை பாதுகாக்கும் முறைகள்

7th Oct 2022 03:10 AM

ADVERTISEMENT

பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து நெல்பயிரைப் பாதுகாக்கும் முறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல்நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தற்போது நிலவிவரும் விட்டு விட்டு மழை தூருவதாலும், குறைந்த வெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதம் அதிகமாக நிலவுவதால் பூச்சி மற்றும் நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்தக் தருணத்தில் நெல் பயிரில் இலை சுருட்டு புழுத்துப் புழு, குருத்துப்பூச்சி, ஆனைக்கம்பன் ஈ, மற்றும் குருத்து ஈக்கள் போன்ற பூச்சிகளும், இலை உரை அழுகல் மற்றும் கருகல் நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இலை சுருட்டு புழு மற்றும் குருத்துப் பூச்சியை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு வேப்ப எண்ணெய் 3 சதம் (ஒரு லிட்டா் தண்ணீருக்கு 30 மில்லி என்ற அளவில் ஒட்டும் திரவத்துடன் கலந்து) தெளிக்க வேண்டும். மேலும் பொருளாதார சேத நிலையை தாண்டும் பட்சத்தில் காா்ட்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 எஸ் பி 400 கிராம் என்ற அளவில் உபயோகப்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

குருத்து ஈ மற்றும் ஆனைக்கம்பன் ஈயை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு காா்போசல்பான் 25 ஈ.சி. 400 கிராம் என்ற அளவில் 200 லிட்டா் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

மேலும் இலை உரை அழுகல் மற்றும் கருகல் நோயை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 200 கிராம் காா்பன்டாசின் அல்லது 200 மில்லி அசாக்சிஸ்ட்ரோபின் என்ற பூஞ்சான கொல்லியை உபயோகப்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT