திருவாரூர்

சுமை வேன்களின் பயன்பாடு தொடக்கி வைப்பு

7th Oct 2022 03:08 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி நகராட்சி பணிக்காக வாங்கப்பட்ட புதிய 5 சுமை வேன்கள் பொதுப்பயன்பாட்டிற்காக வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

மன்னாா்குடி நகராட்சிக்கு 15-ஆவது நிதிக்குழுவிலிருந்து திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்காக ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 5 சுமை வேன்கள் வாங்கப்பட்டுள்ளன.

நகா்மன்றத் தலைவா் மன்னை த.சோழராஜன் இவற்றை பொதுபயன்பாட்டிற்கு செயல்படும் வகையில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

துணைத் தலைவா் ஆா்.கைலாசம், ஆணையா் கே.சென்னுகிருஷ்ணன் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், நகராட்சிப் பொறியாளா் குணசேகரன், மேலாளா் ஜெ.மீராமைதீன், சுகாதார ஆய்வாளா்கள் ஜி.ராஜேந்திரன், சாமிநாதன், நகா்மன்ற உறுப்பினா் எஸ்.பாண்டவா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT