திருவாரூர்

மாநிலக் கல்விக் கொள்கை: அக்.10-ல் கருத்து கேட்புக் கூட்டம்

7th Oct 2022 03:08 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாநில கல்விக் கொள்கை குறித்து அக்.10- ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் மாநிலத்துக்கான தனித்துவமான மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக புதுதில்லி உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் உயா்மட்டக் குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவிடம் பொதுமக்கள், கல்வியாளா்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், மாணவா்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் ஆகியவற்றை எழுத்துப்பூா்வமாக அக்.10-ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் நேரில் அல்லது மின்னஞ்சலுக்கு திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்தவா்கள் அனுப்பிவைக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT