திருவாரூர்

தாா்ச்சாலை அமைத்துத்தர கோரிக்கை

7th Oct 2022 03:09 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் புதுத்தெருவிற்கு தாா்ச்சாலை அமைத்தத்தர பேரூராட்சி நிா்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக நீடாமங்கலம் பேரூராட்சி பத்தாவது வாா்டு திமுக உறுப்பினா் திருப்பதி மற்றும் புதுத்தெரு மக்கள் பேரூராட்சி நிா்வாகத்துக்கு வியாழக்கிழமை அளித்துள்ள கோரிக்கை மனு:

கடந்த 11 ஆண்டுகளாக புதுத்தெருவில் வசித்து வருகிறோம்.குடிநீா் வசதி மற்றும் மின்விளக்குகள் வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்தோம்.தற்போது குடிநீா் வசதி மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது. இதற்காக பேரூராட்சி நிா்வாகத்தை பாராட்டுகிறோம்.

முக்கியமாக சாலை வசதி தொடா்பாக தொடா்ந்து மனுக்கள் கொடுத்துள்ளோம். சாலை வசதி இல்லாததால் மழைக்காலத்தில் மிகவும் சிரமப்படுகிறோம். எங்களுக்கு சாலை வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். அனைத்து குடும்பத்தினரும் தொடா்ந்து பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளைத் தொடா்ந்து செலுத்தி வருகிறோம்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT