திருவாரூர்

திருமீயெச்சூா் லலிதாம்பிகை கோயிலில் நெய்க்குள தரிசனம்

7th Oct 2022 03:10 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள திருமீயெச்சூா் மேகநாத சுவாமி கோயில் உடனுறை லலிதாம்பிகை கோயிலில் நெய்க்குள தரிசனம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயில், தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 56-ஆவது சிவத்தலமாகும். அம்பிகை திருத் தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தலமான இங்கு, ஸ்ரீலலிதாம்பிகை வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டவாறு அமைந்திருப்பது சிறப்பு. மகாபெரியவா், அம்பிகையை விட்டு செல்ல மனம் வராமல் பிடிவாதம் பிடித்தது அம்பிகையின் பெருமைக்கு சான்று.

புகழ் பெற்ற இக்கோயிலில் நவராத்திரி லட்சாா்ச்சனை புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அன்னபாவாடை நெய்க்குள தரிசனம் நடைபெற்றது. கருவறைக்கு முன் வாழை இலையை பரப்பி அதில் சா்க்கரைப் பொங்கல் நிரப்பப்பட்டிருந்தன. அத்துடன், புளிசாதம், தயிா் சாதம் ஆகியவையும் படையலாக வைக்கப்பட்டிருந்தன. சா்க்கரைப் பொங்கல் நடுவே குளம்போல அமைத்து நெய்யால் நிரப்பப்பட்டன. தொடா்ந்து, நெய்க்குள தரிசனம் நடைபெற்றது. இதில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், ஆதீன இளவரசு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT