திருவாரூர்

ஆயுத பூஜை கொண்டாட்டம்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் பகுதியில் கோயில்கள், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் இல்லங்களில் ஆயுத பூஜை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

மரக்கடை கல்யாண சுந்தரேஸ்வரா் கோயில், சாய்பாபா கோயில், பண்டுதக்குடி வாஸலாம்பிகா சமேச உமாபதீஸ்வரா் கோயில், வேளுக்குடி ருத்ரக் கோட்டீஸ்வரா் கோயில், அங்காளப்பரமேஸ்வரி கோயில், லெட்சுமாங்குடி கம்பா் தெரு நீலகண்டேஸ்வரா் கோயில், லெட்சுமாங்குடி - கொரடாச்சேரி பிரதான சாலையில் உள்ள ஜெயசக்தி ஆஞ்சனேயா் கோயில், மூலங்குடி லெஷ்மி நாராயணப் பெருமாள் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

மேலும், பனங்காட்டாங்குடி மற்றும் குடிதாங்கிச்சேரி பகுதிகளில் உள்ள மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோா் சிறப்புப் பள்ளியில் இளைஞா் நீதிக்குழும உறுப்பினா் ப. முருகையன் முன்னிலையில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT