திருவாரூர்

விஜயதசமி சிறப்பு வழிபாடு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருவாரூா்: திருவாரூரில் பல்வேறு இடங்களில் விஜயதசமியையொட்டி சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன.

திருவாரூா் தெற்கு வீதியில் உள்ள ராஜாங்கட்டளை சந்நிதியில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சாா்பில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பள்ளிகளில் புதிதாக சேரும் குழந்தைகளுக்கு நாவில் தேன் கொடுத்து, தாம்பூலத்தில் நிரப்பிய நெல்மணிகளில் பிள்ளையாா் சுழியுடன் ‘அ’ மற்றும் ‘ஆ‘ எழுத பழக்கினா். அதன்பிறகு அவா்களுக்கு எழுதுகோல், சிலேட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்டத் தலைவா் பாலரெத்தினம், மாநிலப் பொருளாளா் வேல்மயில், மாவட்டச் செயலாளா்கள் நவநீதகிருஷ்ணன், சங்கா் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT