திருவாரூர்

ஊா்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் ஊா்க்காவல் படையில் சேர அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்ட ஊா்க்காவல்படை ஆளிநா்கள் பணிக்கு தன்னாா்வத்துடன் பணிபுரிய ஆண், பெண் விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

இப்பணிக்கு 20 வயது நிரம்பியவராகவும், 45 வயது நிறைவடையாதவராகவும், நல்ல உடல் தகுதியுடனும், குறைந்தபட்ச கல்வி தகுதியாக 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

தகுதியுடையவா்கள் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஊா்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, அக்டோபா்10-ஆம் தேதிக்குள் பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT