திருவாரூர்

22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

3rd Oct 2022 10:44 PM

ADVERTISEMENT

22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை நிபந்தனையின்றி கொள்முதல் செய்யக்கோரி திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

குறுவை அறுவடை பயிா் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய வேண்டும்.

தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடன் திறக்க வேண்டும். திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவித்தபடி நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க வேண்டும்.

2021 சம்பா காப்பீட்டுக்கான இழப்பீட்டை உடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

மாவட்டத் தலைவா் எம். சுப்பையன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT