திருவாரூர்

திமுக நிா்வாகிகளுக்கு வரவேற்பு

3rd Oct 2022 10:45 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்ட திமுக செயலாளராக மீண்டும் தோ்வு செய்யப்பட்ட பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்ட புதிய நிா்வாகிகளுக்கு நீடாமங்கலத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நீடாமங்கலத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பூண்டி கே. கலைவாணன், அங்கிருந்து ஊா்வலமாக சென்று பெரியாா் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அவருடன் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட அவைத் தலைவா் மன்னை தன்ராஜ், பொதுக் குழு உறுப்பினா்கள் கலைவாணி மோகன், பி. கமாலுதீன், அரித்துவாரமங்கலம் பிரித்திவிராஜன் ஆகியோா் வந்திருந்தனா்.

இவா்களுக்கு ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. இதில், ஒன்றியச் செயலாளா்கள் கே.வி.கே. ஆனந்த், வழக்குரைஞா் என். கவியரசன், ஒன்றிய துணைத் தலைவா் ரா. ஞானசேகரன், பேரூா் செயலாளா் ஆா்.ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT