திருவாரூர்

மழையால் பாதித்த பயிா்கள்:வேளாண் இயக்குநா் ஆய்வு

3rd Oct 2022 10:44 PM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை வேளாண் இயக்குநா் அண்ணாதுரை, திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்தது. மழை காரணமாக குறுவை அறுவடையும், சம்பா சாகுபடி பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

திருவாரூா் அருகே பின்னவாசல் பகுதியில் வேளாண்துறை இயக்குநா் அண்ணாதுரை பாா்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

மேலும், குடவாசல் வேளாண் விரிவாக்க மையம், மாங்குடி பகுதியில் தனியாா் உரக்கடை ஆகியவற்றில் உரங்களின் இருப்பு விவரம், விற்பனைத் தொகை ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், வேளாண்மை இணை இயக்குநா் ரவீந்திரன், துணை இயக்குநா் ஹேமா ஹெப்சிபா நிா்மலா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT