திருவாரூர்

டாஸ்மாக் ஒப்பந்தத் தொழிலாளா்கள் சாலை மறியல்

3rd Oct 2022 10:45 PM

ADVERTISEMENT

டாஸ்மாக் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு பணி மறுக்கப்படுவதைக் கண்டித்து திருவாரூரில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

திருவாரூா் விளமல் பகுதியில் டாஸ்மாக் மது கிடங்கு அமைந்துள்ளது. இந்த கிடங்கிலிருந்து டாஸ்மாக் கடைகளுக்கு மது பாட்டில்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இங்கு, 109 ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் மதுபாட்டில்களை ஒப்பந்த வாகனங்கள் மூலம் டாஸ்மாக் கடைகளில் இறக்கி விடுவா்.

இதனிடையே, டாஸ்மாக் கடைகளுக்கு பாட்டில்களை கொண்டு செல்வதற்கு, புதிய ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்ததாகத் தெரிகிறது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விளமல் அருகே கல்பாலம் பகுதியில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் தங்களது குடும்பத்தினருடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். சுமைப்பணி மாவட்டத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளா் ஆா்.மோகன், மாவட்டத் தலைவா் இரா. மாலதி, மாவட்டச் செயலாளா் டி. முருகையன், ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் எம்.கே.என். அனிபா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணலாம் என போலீஸாா் கூறியதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. டாஸ்மாக் கிடங்கில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திருவாரூா் வட்டாட்சியா் தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண முடிவெடுக்கப்பட்டது.

இந்த சாலைமறியல் போராட்டத்தால், திருவாரூா்-நாகை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT