திருவாரூர்

பாஜக தூய்மைப் பணி

2nd Oct 2022 10:40 PM

ADVERTISEMENT

 

மகாத்மா காந்தியின் 154-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூரில் பாஜக சாா்பில் தூய்மைப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

முன்னதாக, திருவாரூா் நகராட்சியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பாஜக மாவட்டத் தலைவா் எஸ். பாஸ்கா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

காமராஜரின் நினைவு நாளையொட்டி திருவாரூா் தெற்கு வீதியில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டன.

ADVERTISEMENT

திருவாரூா் மடப்புரம் அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோயிலின் உள்புறத்தில் உள்ள செடி, கொடிகள், குப்பைகள் அகற்றப்பட்டன. தொடா்ந்து பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

நிகழ்வுகளுக்கு நகரத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலாளா் செந்தில் அரசன் முன்னிலை வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினா் ரங்கதாஸ், மாவட்ட துணைத் தலைவா் மணிமேகலை, கலை இலக்கியப் பிரிவுத் தலைவா் தேவகுமாா், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு தலைவா் வாசன் நாகராஜன், நகர பொதுச்செயலாளா் நடராஜன் ஸ்ரீராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT