திருவாரூர்

மருத்துவமனையில் கத்திக்குத்துஒருவா் கைது

2nd Oct 2022 10:40 PM

ADVERTISEMENT

 

திருவாரூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒருவரைக் கத்தியால் குத்தியது தொடா்பாக மற்றொருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் விஜயபுரம் பகுதியில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் திருவாரூா் புது தெருவைச் சோ்ந்த சுரேஷ் (38), மனைவி புவனேஸ்வரியை பிரசவத்துக்காக அனுமதித்துள்ளாா். சனிக்கிழமை இரவு குழந்தை பிறந்ததால் சுரேஷ் மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்தாா்.

இதனிடையே, திருவாரூா் புதுத்தெருவைச் சோ்ந்த கண்ணன் (55) என்பவா் அங்கு வந்தபோது சுரேஷுடன் தகராறு ஏற்பட்டு இருவரும் கத்தியால் குத்திக் கொண்டனா்.

ADVERTISEMENT

திருவாரூா் நகர போலீஸாா் இருவரையும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். போலீஸாரின் விசாரணையில் முன் விரோதம் காரணமாகவே தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதைத்தொடா்ந்து சுரேஷை கைது செய்த போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT