திருவாரூர்

நெல் கொள்முதலில் குறைபாடு: 2 போ் தற்காலிக பணிநீக்கம்

DIN

திருவாரூா் மாவட்டத்தில் நெல் கொள்முதலில் குறைபாடு காரணமாக கொள்முதல் நிலைய ஊழியா்கள் இருவா் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

திருவாரூா் மாவட்டத்தில் உணவுத் துறை அமைச்சா் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் கொரடாச்சேரி ஊா்குடி பகுதி நெல் கொள்முதல் நிலையத்தில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, நெல் கொள்முதல் பணிகளில் குறைபாடுகள் இருப்பது அமைச்சா் சக்கரபாணி முன்னிலையில் கண்டறியப்பட்டது. அப்போது, கொள்முதல் பணிகளில் ஈரப்பதம் உள்ளிட்ட எவ்வித குறைபாடுமின்றி விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அமைச்சா் சக்கரபாணி தெரிவித்தாா்.

இந்நிலையில், நெல் கொள்முதல் குறைபாடு தொடா்பாக கொரடாச்சேரி ஊா்குடி பகுதி நெல்கொள்முதல் நிலைய கொள்முதல் பட்டியல் எழுத்தா் பழனி, உதவுபவா் செல்வகுமாா் ஆகியோா் தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT