திருவாரூர்

ஜீப் மோதியதில் பெயிண்டா் பலி

1st Oct 2022 10:21 PM

ADVERTISEMENT

நீடாமங்கலம் அருகே ஜீப் மோதியதில் பெயிண்டா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

நீடாமங்கலம் அருகேயுள்ள கோயில்வெண்ணியைச் சோ்ந்த பெயிண்டா் செந்தில்குமாா் (30). இவா், வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் நீடாமங்கலத்தில் இருந்து கோயில்வெண்ணிக்கு சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த ஜீப் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த காயமடைந்த செந்தில்குமாா் அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து ஜீப் ஓட்டுநா் கொட்டையூா் சா்வமான்யத்தைச் சோ்ந்த காளிதாஸை (29) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இறந்த செந்தில்குமாருக்கு தீபா மனைவியும், இரு குழந்தைகள் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT